வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கிடங்குகளுக்கான கட் டட அனுமதியை விரைவு படுத்துவதற்காக, இவற்றை தொழில் கட்டடங்களாக வகைப்பாடு மாற்றும் நடவடிக்கைகளை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை துவக்கி உள்ளது.
நாடு முழுதும், தொழில் வளர்ச்சிக்கு இணையாக சரக்கு போக்குவரத்து துறையின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப கிடங்கு வளாகங்கள் கட்டுதல், பராமரித்தல் பணிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக கிடங்குகளுக்கான புதிய கொள்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழகத்தில் இக்கொள்கையின் முக்கிய கூறுகள் இன்னும் அமலுக்கு வராமல் உள்ளன. இந்த விஷயத்தில் தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழிற்சாலை கட்டட அனுமதி பணிகளை விரைவுபடுத்துவது குறித்து அரசு செயலர்கள் நிலையிலான கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கிடங்குகளுக்கு திட்ட அனுமதி பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
வாய்ப்பு
இதன்படி, கிடங்கு களை, தொழில் நிறுவன கட்டட வகைப்பாட்டில் சேர்க்க வேண்டும் என்பதில் அதிகாரிகள் நிலையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இதனால், தொழில் நிறுவனங்களுக்கான ஒற்றை சாளர முறையில் கிடங்குகளுக்கான கட்டட அனுமதி விரைவாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி, வகைப்பாடு மாற்ற நடவடிக்கைகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -