ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், தமிழக கவர்னர் ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். அதனை ஒட்டி பெயர் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கவர்னர் ரவி குறித்து ஆளும் கட்சியினர் ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் நிகழ்ச்சி குறித்து சர்ச்சையை எழுப்பி உள்ள நிலையில், இன்று தாவரவியல் பூங்காவில் உள்ள கவர்னர் ரவியின் பெயர் பலகை புல்வெளியில் வீசப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு எழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்