ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2024 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: ▪ சர்வதேச பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வலிமையாகவும்,
RBI Monetary Policy Committee decides to keep repo rate unchanged at 6.5 pcரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

புதுடில்லி: ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2024 ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது.

மும்பையில் நிருபர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:


▪ சர்வதேச பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்திய பொருளாதாரம் மற்றும் நிதித்துறை வலிமையாகவும், துடிப்புடனும் உள்ளது.


▪ ரெபோ வட்டி வகிதத்தில் மாற்றம் கிடையாது. 6.5 சதவீதமாகவே நீடிக்கிறது.


▪ பணவீக்கம் உயர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.


▪ மொத்த பணவீக்கம் உயர்வு 4 சதவீதமாக நீடித்து வருகிறது. ஆண்டு முழுவதும் இப்படியே இருக்கும் என கணித்துள்ளோம்


▪ உலக அரசியல் நிலவரம் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.


▪ உள்நாட்டு தேவை நிலை, வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது.


▪ அந்நிய செலாவணி போதுமான அளவு கையிருப்பில் உள்ளது.


▪ இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும். 2ம் காலாண்டில் 6.5 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 6 சதவீதமாகவும், 4ம் நிதியாண்டில் 5.7 சதவீதமாகவும் இருக்கும். 2024ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

Nallavan -  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-202322:28:12 IST Report Abuse
Nallavan Appadiye konjam veettu kadanukkaana vattiyaiyum kuraithaal nalladhu.
Rate this:
Cancel
08-ஜூன்-202311:19:58 IST Report Abuse
ஆரூர் ரங் தென்மேற்கு பருவமழை தாமதத்தால் சிறிதளவு பயிர்விளைச்சல் பாதிக்கப்பட வாய்ப்புண்டு எனும் செய்தி இம்மாத பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் அடுத்த மாதமாவது 25 அடிப்படைப் புள்ளிகள் அளவுக்கு வட்டியைக் குறைப்பது🤔 பொருளாதாரத்துக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X