ஒரகடம்: அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்த மாநிலமாக திகழ்வதாகவும், அமைதி மாநிலமாக இருப்பதால் இங்கு அதிக முதலீடுகள் வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 'தொழில் 4.0' திட்டத்தின்கீழ் ரூ.763 கோடி மதிபீ்பிலான 22 அரசு தொழில் மையங்களை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை: அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தொழில்துறை சார்ந்து தமிழகம் பெற்றுள்ள வளர்ச்சி மிகப்பெரியது. மின்சார பொருட்கள் உற்பத்தில் தமிழகம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
புதிய தொழில்கள் துவங்க உகந்த சூழல் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. அதேபோல், தொழில் மையங்களுக்கு தேவையான இளைய சக்தி மிகுந்த மாநிலம் தமிழகம். அமைதி மாநிலமாக விளங்குவதால் அதிக முதலீடுகள் தமிழகத்திற்கு வருகின்றன. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவர். இவ்வாறு அவர் உரையாற்றினார்.