வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை மாநகரளாட்சி கமிஷனராக இருந்தபோது தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, ஜாதி ரீதியாக தன்னை இழிவுபடுத்தியதாக ஈரோடு கூடுதல் கலெக்டர் மணீஸ் நரவனே புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச்செயலாளர் இறையன்புவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக இருந்த என்னை, பட்டியல் இனத்ததை சேர்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டும் என்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால், உயிரை மாய்த்துக் கொள்ளும் மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றேன்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பிரச்னையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். அதேபோல், கோப்புகளில் வேண்டும் என்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்தார். இவ்வாறு அந்த கடிதத்தில் மணீஷ் நரவானே கூறியுள்ளார்.