பாதியளவு 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன: ரிசர்வ் வங்கி கவர்னர்
பாதியளவு 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன: ரிசர்வ் வங்கி கவர்னர்

பாதியளவு 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன: ரிசர்வ் வங்கி கவர்னர்

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீதம் அளவிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, மக்கள் தங்கள் வசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி
Rs 2,000 notes worth Rs 1.80 lakh crore have come back in banks so far: RBI Governorபாதியளவு 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன: ரிசர்வ் வங்கி கவர்னர்

புதுடில்லி: இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுகளில் 50 சதவீதம் அளவிற்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி, மக்கள் தங்கள் வசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி அவகாசம் வழங்கியுள்ளது.


வங்கி மூலம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சில வரம்புகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, நபர் ஒருவர் வங்கிகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் மட்டுமே ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியும். அதேநேரத்தில் டெபாசிட் செய்ய எந்த லிமிட்டும் இல்லை.latest tamil news

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது: கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நாட்டில் ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பணத்தை திரும்பப்பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு, இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2000 நோட்டுகள் திரும்ப வந்துள்ளன.


அதாவது புழக்கத்தில் இருந்த 50 சதவீத நோட்டுகள் திரும்பியுள்ளன. அதில், 85 சதவீதம் வங்கி டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளன. மற்றவை வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

C G MAGESH - CHENNAI,இந்தியா
08-ஜூன்-202321:44:39 IST Report Abuse
C G MAGESH மீதி பாதி கோல்மால் புறத்திலும், கான் கிராஸிலும் இருக்கும்.
Rate this:
Cancel
தமிழன் - Chennai ,இந்தியா
08-ஜூன்-202320:40:11 IST Report Abuse
தமிழன் அடிப்பாங்களாம்.. அப்புறம் செல்லாது என பிடுங்குவாங்கலாம்.. மொத்தத்தில் இது மக்கள் பணம் செலவாகிறது
Rate this:
08-ஜூன்-202322:11:36 IST Report Abuse
theruvasaganசெல்லாதுன்னு சொல்லவே இல்லை. நிறைய அவகாசம் தந்து அதற்குள் அதை கொடுத்துவிட்டு அதற்கீடாக வேற பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்றுதானே அறிவிப்பு. உங்களுக்கு எங்க இடிக்கிறது. எதுக்கு இடிக்கிறது....
Rate this:
Cancel
தமிழன் - Chennai ,இந்தியா
08-ஜூன்-202320:34:48 IST Report Abuse
தமிழன் பாதியளவு 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்பட்டன...//// அட பாவமே ... பாதியாக கிழித்து கொடுத்து விட்டார்களா..? (என்று தான் தலைப்பு செய்தியை படித்தவுடன் தெரிந்தது..)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X