வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: 'ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம்' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
லோக்சபாவுக்கு அடுத்தாண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் களம் இறங்கியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பும் விடுக்கப்பட்டது. திடீரென கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து, சரத்பவார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
முதல்வர் நிதிஷ்குமார் ஜூன் 23ம் தேதி கூட்டத்திற்கு பங்கேற்க, எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவர் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் அழைத்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் நான் பங்கேற்க உள்ளேன். தேசிய பிரச்னையில் இணைந்து செயல்படுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் நடந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இது குறித்து சரத்பவார் கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக, சிலர் இத்தகைய சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். இதில் அரசியல் தேவையில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும் போது, உண்மை அனைவருக்கும் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.