உலக சாம்பியன்ஷிப் பைனலில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன்ரோகித் சர்மா, தனது 50வது டெஸ்டில் பங்கேற்றார். தவிர இது, ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்சிற்கும், 50வது டெஸ்ட் போட்டியானது.
ஒடிசா ரயில்கள் விபத்தில் பலியானவர்களுக்குஅஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு நிற பட்டை அணிந்து பங்கேற்றனர். போட்டி துவங்குவதற்கு முன், இரு அணி வீரர்களும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
உலகின் 'நம்பர்-1' டெஸ்ட் பவுலர்இந்தியாவின் அஷ்வின். இவருக்கு,உலக டெஸ்ட் பைனலுக்கான இந்திய 'லெவன்' அணியில் இடம் கிடைக்கவில்லை. இதன்மூலம் இவர், இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 6வது டெஸ்டில் 'லெவன்' அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
இதுகுறித்து பாண்டிங், மஞ்ச்ரேக்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உலகின் தலைசிறந்த பவுலரான இவர், மூன்று வித போட்டிகளிலும் சிறப்பாகவிளையாடுவார். 'கேரம்' உட்பட பல்வேறு வகையாக பந்து வீசக்கூடியவர். கடைசி நேரத்தில் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். இப்போட்டியின் முடிவில் தான், இவர் நீக்கப்பட்டது சரியா என்பது தெரிய வரும்.