சென்னை: தமிழக ஆவண காப்பகத்தில் வரலாறு, சமூக அறிவியல், தமிழ் தொடர்புடைய துறைகளில் உதவித் தொகையுடன் கூடிய ஓராண்டு ஆராய்ச்சி மேற்கொள்ள முதுகலை பட்டப்படிப்பு முடித்த கல்வியாளர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் நோக்கம், ஆர்வம் உள்ள முதுகலை பட்டதாரிகள், ஆவணக் காப்பகத்தின் தொன்மையான ஆவணங்களை ஆராய்ந்து, சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில், தங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்கும், தமிழகத்தின் சமூக வரலாற்றை வெளிக் கொணர்வதற்கும் உதவுவதாகும்.
விண்ணப்ப படிவத்தை www.tnarchives.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பின் விண்ணப்பங்கள், 'ஆணையர், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, எழும்பூர், சென்னை' என்ற முகவரிக்கு, ஜூன் 30ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.