-கரடி தாக்கியதில் பாதிப்புஅரசுப் பணி கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-கரடி தாக்கியதில் பாதிப்புஅரசுப் பணி கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

-கரடி தாக்கியதில் பாதிப்புஅரசுப் பணி கோரி வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஜூன் 08, 2023 | |
Advertisement
மதுரை: தென்காசி மாவட்டத்தில் கரடி தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தாக்கலான வழக்கில் தமிழக வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.தென்காசிமாவட்டம் சிவசைலம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு மணிகண்டன் தாக்கல் செய்த மனு: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் எங்கள் ஊர் உள்ளது. வன விலங்குகள் அடிக்கடி

மதுரை: தென்காசி மாவட்டத்தில் கரடி தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2 பேரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க தாக்கலான வழக்கில் தமிழக வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தென்காசிமாவட்டம் சிவசைலம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு மணிகண்டன் தாக்கல் செய்த மனு: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் எங்கள் ஊர் உள்ளது. வன விலங்குகள் அடிக்கடி விவசாய நிலம், வீடுகளுக்குள் புகுந்து சேதப்படுத்துகின்றன. வைகுண்டமணி என்பவரை 2022 ஜன.,6 ல் கரடி தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற எனது தந்தை சைலப்பனையும் தாக்கியது. அவரது கண், மூளை, நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது.

எங்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கு தகுந்த சிகிச்சை, ரூ.20 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தனி நீதிபதி, வனத்துறை தரப்பில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க பிப்.,23 ல் உத்தரவிட்டார்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர்,'வன உயிரினங்களால் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முடியும். அதை பெற மறுத்துவிட்டீர்கள்.ரூ.20 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்க அரசாணையில் இடமில்லை,' என நிராகரித்தார். அதை ரத்து செய்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மணிகண்டன் குறிப்பிட்டார்.

சிவசைலம் சங்கர நாராயணன், 'வைகுண்டமணியை கரடி தாக்கியது. அவரை காப்பாற்ற முயன்ற எனது தந்தை நாகேந்திரனை கரடி தாக்கியதில் பாதிக்கப்பட்டார். எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 6 வாரங்கள் ஒத்திவைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X