"திமுக சொன்ன வாக்குறுதி என்னாச்சு?": அண்ணாமலை கேள்வி
"திமுக சொன்ன வாக்குறுதி என்னாச்சு?": அண்ணாமலை கேள்வி

"திமுக சொன்ன வாக்குறுதி என்னாச்சு?": அண்ணாமலை கேள்வி

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.2ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும் எனக் கூறியது என்னாச்சு? என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். அதே நேரத்தில்,அவர் கடந்த 9 ஆண்டுகளில் பாஜ., ஆட்சியில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 67% வளர்ச்சி கண்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 7

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: திமுக தேர்தல் வாக்குறுதியில், நெல் குவிண்டாலுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.2ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும் எனக் கூறியது என்னாச்சு? என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். அதே நேரத்தில்,அவர் கடந்த 9 ஆண்டுகளில் பாஜ., ஆட்சியில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 67% வளர்ச்சி கண்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.
latest tamil news

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 7 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதையடுத்து, குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 143 ரூபாய் உயர்த்தப்பட்டு 2,183 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை எண்ணெய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 9 சதவீதமாக உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் விலை 4,000 ரூபாயில் இருந்து 6,377 ரூபாயாக அதிகரித்து உள்ளது.


இது குறித்து தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

14 பயிர்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலையை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


நெல்லுக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை ரூ.143 உயர்த்தப்பட்டு, குவிண்டாலுக்கு ரூ.2183 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 2013-14 ஆண்டு உடன் ஒப்பிடும் போது, கடந்த 9ஆண்டுகளில் பாஜ., ஆட்சியில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை 67% வளர்ச்சி கண்டுள்ளது.latest tamil news

இத்தருணத்தில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆகவும், கரும்புக்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை டன் ரூ.4ஆயிரமாகவும் உயர்த்தப்படும் எனக் கூறியதை நினைவூட்ட விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதியில், சொன்ன குறைந்தபட்ச ஆதரவு விலை என்னாச்சு? என்ற கேள்வியை, பல்வேறு தரப்பினர் இடையே எழுப்பி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (25)

Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-202304:41:33 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga We have told more than 500 items in our manifesto. For Petrol, Diesel we told we will reduce by Rs.5 and 4 per litre and காஸ் சிலிண்டர் விலையை இருநூறு ருபாய் குறைப்போம் என்று கூட சொன்னோம். மின்சார கட்டண முறையை மாதாமாதா மாதம் கட்டுப்படியான உத்தரவு போடுவோம் என்று கூட கூறினோம். மேலும் ஊழலில் ஈடுபட்ட தீமூகா முன்னாள் அமைச்சர்களின் வழக்குகளை யாருடைய தலையீடும் இல்லாமல் உடனடியாக லோகபால் மூலம் விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினோம். இதையெல்லாம் மக்களுக்கு அப்பப்போ ஏதாவது பணம் கொடுத்து மறக்கடிக்கலாம்னு பாத்தா இப்படி அண்ணாமலை வந்து ஒவ்வொண்ணா கேப்பாருன்னு யாருக்கு தெரியும். பாருங்க முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக கூட ஒண்ணுமே இதுபத்தி கேக்கல. இவரு மட்டும் தாங்க ஒரே தொல்லை.
Rate this:
Cancel
08-ஜூன்-202320:25:30 IST Report Abuse
மான் மானங்கெட்ட மக்கள் இருக்கும் வரை அது எல்லாமே காத்துல போயிடும்
Rate this:
Cancel
08-ஜூன்-202319:55:57 IST Report Abuse
மதுமிதா தில்லா கரண்டிற்கே ஷாக் தந்தவர்கள் வார்த்தை அம்னீஷியா வாகாதா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X