சென்னை: ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கையில் டிஜிபி சைலேந்திர பாபு கூறியிருப்பதாவது; காணாமல்போன குழந்தைகளை விரைவாக கண்டறிந்து, அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்க அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களிலும் தனித்தனி சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.