சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் தற்காலிக அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்புலன்ஸ் டிரைவர்களாக நியமிக்கப்பட்ட 65 பேர் தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 800 டிரைவர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.