ஜம்மு: திருப்பதி ஜம்மு - காஷ்மீரில் புதிதாக கட்டப்பட்ட ஏழுமலையான் கோயில் பக்தர்கள் வழிபடுவதற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள மசீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. 62 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த கோயில், பக்தர்கள் வழிபடுவதற்காக, திறந்து வைக்கப்பட்டது.மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, கவர்னர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கோயிலை திறந்து வைத்து, அங்கு நடந்த பூஜையிலும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.