சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழர்
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழர்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழர்

Updated : ஜூன் 08, 2023 | Added : ஜூன் 08, 2023 | கருத்துகள் (17) | |
Advertisement
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அறிவித்துள்ளார். இதற்காக தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அவர்
Indian-origin senior minister Tharman to run in Singapores Presidential electionசிங்கப்பூர் அதிபர் தேர்தலில் களமிறங்கும் தமிழர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தமிழரான தர்மன் சண்முகரத்தினம் அறிவித்துள்ளார். இதற்காக தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்வதாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


சிங்கப்பூரில் அதிபர் ஹலிமா யாக்கோப் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அவர் கடந்த மே 29ம் தேதி அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் மக்கள் செயல் கட்சியின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தமிழரான இவர், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சி, அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.latest tamil news

இது குறித்து பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், 'தர்மன் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கும் மிகப்பெரிய இழப்பு' என்றார். இவர் துணைப்பிரதமர், நிதியமைச்சர், கல்வி அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். மேலும் பொருளியல் பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்ற அவர் பிரதமருக்கு பொருளியல் கொள்கைகள் குறித்து ஆலோசனையும் தருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (17)

Jayaraman Ramaswamy - Chennai,இந்தியா
09-ஜூன்-202315:44:26 IST Report Abuse
Jayaraman Ramaswamy மனிதனை மனிதனாக மதிக்க தெரிந்தவர்கள்தான் பெருமக்கள். அவர்கள் தலைவர்கள் ஆனால் நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை பயக்கும்.
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202307:35:08 IST Report Abuse
Vijayan Singapore தர்மன் மிகச்சிறந்த கல்விமான், மூத்த அமைச்சர், பிரதமருக்கு நம்பிக்கையானவர், எல்லா சமூகத்தையும் ஒன்றினைக்கும் வல்லமைபெற்றவர், எங்களுடைய குடும்பத்ததின் சார்பில் வாழ்த்துக்கள், ஓய்வு பெறும் தற்போதய அதிபர் திருமதி அலிமா அவர்களும் மிகச்சிறந்த பன்பாளர், அவர்களுக்கும் நம்மடைய நன்றிகளும் மற்றும் வாழ்த்துக்களும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
09-ஜூன்-202305:10:57 IST Report Abuse
Kasimani Baskaran மக்கள் செயல் கட்சியின் வேட்பாளர்களிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்றால் அது தர்மன் ஒருவர்தான். இன்னும் அடிமட்ட தொண்டர்களுடன் இணைந்து தொகுதியில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பிரதமராவதில் ஆர்வமில்லாதவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X