வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஞ்சிபுரம்: இந்தியாவிலேயே, புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம், ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் , தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டு உள்ள 4.0 தொழில்நுட்ப மையத்தை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் பேசியதாவது: இந்தியாவிலேயே புத்திசாலி மாணவர்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. வாய்ப்புகள் ஏராளமாக உள்ளதால், மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழர் உலகின் தலைசிறந்த டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்திருப்பதும், நாமக்கல், மோகனூரில் பிறந்து அரசு பள்ளியில் படித்து இவ்வளவு முன்னேறி இருக்கிறார் என்பதும் தமிழகத்திற்கும், நமக்கும் பெருமையாக உள்ளது. தமிழக இளைஞர்கள், சந்திரசேகரனை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு முன்னேற்றம் காண வேண்டும் என்றார்.