லண்டன்: உலக டெஸ்ட் பைனலில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 88ரன்கள் எடுத்துள்ளது.

ஐ.சி.சி., உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்தின் லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 327 ரன் எடுத்திருந்தது. ஸ்மித் (95), ஹெட் (146) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாவது நாளில் ஸ்மித், ஹெட் இருவரும் வேகமாக ரன் சேர்த்தனர். சிராஜ் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த ஸ்மித், டெஸ்ட் அரங்கில் 31வது சதம் கடந்தார். நான்காவது விக்கெட்டுக்கு 285 ரன் சேர்த்த போது, சிராஜ் வீசிய 'ஷார்ட் பிட்ச்' பந்தில் ஒரு வழியாக அவுட்டானார் ஹெட் (163 ரன், 174 பந்து).
அடுத்து ஷர்துல் தாகூரை பந்துவீச அழைத்தார் ரோகித். இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. ஷர்துல் வீசிய முதல் பந்தில் ஸ்மித் (121), போல்டானார்.
பின் வந்த ஸ்டார்க்கை (5), தனது துல்லிய 'த்ரோவால்' ரன் அவுட்டாக்கி அனுப்பி வைத்தார் மாற்று வீரர் அக்சர் படேல். அலெக்ஸ் கேரி 48 ரன் எடுத்தார். லியான் (9), கம்மின்ஸ் (9) இருவரும் சிராஜ் 'வேகத்தில்' வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4, ஷமி 2, ஷர்துல் 2 விக்கெட் சாய்த்தனர்.
கேப்டன் ரோகித் சர்மா , சுப்மன் கில் அவுட்
இரண்டாவது நாளில் இந்தி்யா கேப்டன் ரோகித் சர்மா சுப்மன்கில் ஆகியோர் அவுட்டான நிலையில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 151 ரன்கள் எடுத்திருந்தது.