சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் 27 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறி இருப்பதாவது: காணாமல் போன குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் களம் இறங்கினர். இதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 27 குழந்தைகள் மீட்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 25 பெண் குழந்தைகளும் 2 ஆண் குழந்தைகளும் ஆவர். மீட்கப்பட்ட குழந்தைகள் அவரவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.