வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,: 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடக்கவுள்ளது.
'மிஸ் வேர்ல்ட்' எனப்படும் உலக அழகி போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கடைசியாக நம் நாட்டில் கர்நாடக மாநிலம் பெங்களூரில், 1996ல் உலக அழகி போட்டி நடந்தது.
இந்நிலையில், 2023ம் ஆண்டுக்கான உலக அழகியை தேர்வு செய்வதற்கான இறுதி போட்டி, வரும் நவம்பரில் நம் நாட்டில் நடக்கவுள்ளது:
![]()
|
இது, 71வது உலக அழகி போட்டி.இது குறித்து உலக அழகி போட்டிக்கான அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறியதாவது:மீண்டும் இந்தியாவில் உலக அழகி போட்டி நடக்கவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒரு மாதத்துக்கு நடக்கும் இந்த போட்டியில், 130 நாடுகளைச் சேர்ந்தஅழகிகள் பங்கேற்கஉள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது ஐரோப்பிய நாடான போலந்தைச்சேர்ந்த கரோலினா உலக அழகியாக உள்ளார். இவர், தற்போது இந்தியா வந்துள்ளார். அவர் கூறுகையில், ''உலகில் மிகச் சிறந்த விருந்தோம்பல் கலாசாரம் உடைய நாடு, இந்தியா. இதை என் தாய் வீடு போல் உணர்கிறேன். இங்கு உலக அழகிப் போட்டி நடக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.