வாரணாசி : ஞானவாபி மசூதி வழக்கை தொடர்ந்த, ஐந்து ஹிந்து பெண்களில் ஒருவர், தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு, ஜனாதிபதி, திரவுபதி முர்முவுக்கு, கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
![]()
|
உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் அருகே, ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் பல ஹிந்து கடவுள்களின் சிலைகளும் உள்ளன,
இங்கு, ஆண்டு முழுதும் வழிபாடு நடத்த அனுமதிகோரி, ஐந்து ஹிந்து பெண்கள், வழக்கு தொடர்ந்தனர். இவர்களில், ராக்கி சிங் என்பவர், வழக்கில் இருந்து, தன்னை விடுவித்து கொண்டதாக கூறப்பட்டது.
இச்சூழலில், ராக்கி சிங் ஜனாதிபதி, திரவுபதி முர்முவுக்கு, தன்னை கருணை கொலை செய்யக்கோரி, மனு அனுப்பி உள்ளார்.
இது குறித்து, நேற்று (ஜூன்.,7)ம் தேதி, ராக்கி சிங் அனுப்பியுள்ள, மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த, 2022 மே., மாதம், இந்த வழக்கை தொடர்ந்த, மற்ற நான்கு பேரும், நானும் என், வழக்கறிஞரான ஜிதேந்திர சிங் விசெனும், வழக்கில் இருந்து, எங்களை விடுவித்து கொண்டதாக கூறினர்.
ஆனால், அதுபோன்ற அறிக்கையோ அல்லது தகவலோ என் தரப்பிலிருந்தும், வழக்கில் என் சார்பாக, ஆஜரான வழக்கறிஞர், ஜிதேந்திர சிங் விசென் தரப்பிலிருந்தும் வெளியிடப்படவில்லை.
இந்த அவதுாறால், ஒட்டு மொத்த ஹிந்து சமூகமும், எனக்கும், என் குடும்பத்தாருக்கும் எதிராக திரும்பியது. இதனால், நானும் என் வழக்கறிஞரும், மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளோம். இதிலிருந்து விடுபட, கருணை கொலை மட்டுமே தீர்வு.
நாளை (ஜூன்.,9)ம் தேதி, காலை, 9:00 மணி வரை காத்திருப்பேன், அதற்குள், நீங்கள் முடிவெடுக்கவில்லை எனில், நானே சுயமாக முடிவெடுக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு, அவர் கூறியிருந்தார்.
![]()
|
நான்கு ஹிந்து, பெண் வாதிகள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின், கூறுகையில்,‛ஞானவாபி மற்றும் பிற தொடர்புடைய வழக்குகளில் நாங்கள், முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம். ராக்கி சிங் கூறும், அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. அவற்றுக்கு, பதிலடி கொடுப்பதன் வாயிலாக, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை,'' என்றார்.
இந்த விவகாரம், ராக்கி சிங் உண்மையிலேயே வழக்கில் இருந்து பி்ன்வாங்கினாரா அல்லது அவ்வாறு, அவதுாறு பரப்பப்பட்டதா என, பல சர்ச்சைகளை எழுப்பி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement