ஸ்ரீபெரும்புதுார்:எம்பார் 1,000வது ஆண்டு அவதார உற்சவ விழாவை முன்னிட்டு, மதுரமங்கலத்தில் 54 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மதுரமங்கலம் கிராமத்தில் வைணவ மகான் எம்பார் சுவாமிகளின் அவதார தலமான வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.
இங்கு எம்பார் அவதரித்த 1,000வது ஆண்டு அவதார உற்சவ விழா 2026ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு நன்கொடையாளர்கள் வாயிலாக 54 லட்சம் ரூபாய் மதிப்பில் 31 அடி உயரத்தில் தேர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.
மதுரமங்கலம் எம்பார் கோவில் அருகே வேங்கை மரத்தில் தேர் அமைக்கும் முதல் கட்ட பணிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.