காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, வெள்ளைகுளம் தெற்கு கரை தெரு கோடியில், அப்பகுதியில் உள்ள மக்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக வேதாசலம் நகருக்கு செல்லும் பிரதான சாலை அருகில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இப்பகுதி மக்களின் வீட்டு உபயோகத்திற்கு தொட்டி நீரை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், தொட்டி அமைக்கப்பட்டுள்ள பீடத்தை ஒட்டி, மண் அரிப்பு காரணமாக, விரிசல் ஏற்பட்டு, தொட்டி சாய்ந்து விழும் நிலையில் இருந்தது.
இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், பீடத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி சீரமைக்கப்பட்டது.