ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜி.சி.எஸ்.கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது, சி.ஜி.என்.கண்டிகை மற்றும் சி.ஜி.என்.கண்டிகை காலனி.
இந்த கிராமங்களில் ஒட்டுமொத்தமாக, 200 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு அரசு நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில், 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் வகுப்பறை கட்டடம் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
அந்த கட்டடத்திற்கு அருகில் உள்ள சமையலறை கட்டடம் சேதமடைந்து உள்ளது.
அதே போல், குடிநீர் தொட்டியும் சீரமைக்கப்படாததால், மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, சமையலறை மற்றும் குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.