திருநெல்வேலி: தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளர் ஆன சிவராமகிருஷ்ணன் வயது மூப்பு காரணமாக இன்று மாலை காலமானார் அவருக்கு வயது 93.
தென்காசியில் 1927ல் ஆரம்பித்து 96 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வரும் திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராக இருந்தவர் திரு. சிவராமகிருஷ்ணன் .
93 வயதான இவர் தனது 13 வயதிலேயே இந்த கழகத்திற்காக உழைக்க ஆரம்பித்தார். கடந்த 63 ஆண்டுகளாக தொடர்ந்து செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார்..
இவரது சேவையை பாராட்டி சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இவருக்கு தமிழ்ச்செம்மல் விருதை வழங்கி இருக்கிறார்.
திருவாசகம் முற்றோதுதல் நடப்பது போல திருக்குறள் முற்றோதுதல் என்ற முறையை அறிமுகப்படுத்தியவரும் இந்த கழகத்தில் உள்ள நூலகத்தை துவக்கியவரும் சிவராமகிருஷ்ணன் தான்.
இப்போது நடக்கும் 97 வது திருக்குறள் விழா ஏற்பாட்டுகளைக்கூட முழு முனைப்புடன் செய்து வந்தார் 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார்.