கோல்கட்டா: ஆசிரியர் தேர்வில் நடந்தமுறைகேடு தொடர்பாக மேற்குவங்க திரிணாமுல் காங்., கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கவங்க மாநிலத்தில் கடந்த 2014-2021ம் ஆண்டுகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ.,வழக்குப்பதிந்து முதல்வர் மம்தா பானர்ஜி உறவினரான அபிஷேக் பானர்ஜியிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் நடந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் வரும் 13-ம் தேதி கோல்கட்டாவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.