''எந்த விதிகளையும் மதிக்கலை பா...'' என்றபடியே, இஞ்சி டீயை கையில் எடுத்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என்றார், அந்தோணிசாமி.
''டாஸ்மாக் நிறுவனத்துக்கு, 5,300 மதுக் கடைகள் இருக்குது... இந்தக் கடைகளுக்கு, 43 கோடவுன்கள்ல இருந்து, மதுபான பெட்டிகளை வேன்கள்ல சப்ளை செய்றாங்க பா...
''இந்த பணிக்கு, மார்ச் மாசம் 'டெண்டர்' விட்டாங்க... டெண்டர்ல தேர்வான நிறுவனங்களுக்கு பணிகளை தராம, சிலர் தங்களுக்கு வேண்டிய புதிய நிறுவனத்துக்கு குடுக்க முடிவு பண்ணியிருக்காங்க பா...
''இத்தனைக்கும், புதிய நிறுவனம் டெண்டர்லயே கலந்துக்கல... அந்த நிறுவனம், சமீபத்துல தான், 275 வேன்களை வாங்கி, புதுசா இந்த தொழில்ல குதிக்குது பா...
''இவ்வளவு நாளா, அந்தந்த ஏரியாவைச் சேர்ந்த பலர் இந்த தொழில்ல ஈடுபட்டாங்க... இப்ப, ஒரே நிறுவனம் இந்த வாய்ப்பை தட்டி பறிச்சிடுச்சு பா...
''இந்த நிறுவனத்துக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த, 25 பேர் தான் உரிமையாளர்கள்னு சொல்றாங்க... 'இது சம்பந்தமா, முதல்வர் வரைக்கும் புகார் குடுத்தும் பயனில்லை'ன்னு பாதிக்கப்பட்டவங்க புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.