ஐ.ஏ.எஸ்., ஆதிக்கம் முடிவு; ஆசிரியர்கள் உற்சாகம்
ஐ.ஏ.எஸ்., ஆதிக்கம் முடிவு; ஆசிரியர்கள் உற்சாகம்

ஐ.ஏ.எஸ்., ஆதிக்கம் முடிவு; ஆசிரியர்கள் உற்சாகம்

Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
''ஐ.ஏ.எஸ்., ஆதிக்கம் முடிஞ்சதுன்னு சந்தோஷமா இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''பள்ளிக்கல்வி துறையில, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துல உருவாக்கப்பட்ட கமிஷனர் பணியிடத்தை நிறுத்தி வச்சுட்டு, மறுபடியும் இயக்குனர் பதவியை கொண்டு வந்துட்டாங்களே... ரெண்டு வருஷமா நடந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வாகத்தால, அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் இருந்த இடமே தெரியாம
IAS, dominant end; Teachers are excited  ஐ.ஏ.எஸ்., ஆதிக்கம் முடிவு; ஆசிரியர்கள் உற்சாகம்

''ஐ.ஏ.எஸ்., ஆதிக்கம் முடிஞ்சதுன்னு சந்தோஷமா இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''பள்ளிக்கல்வி துறையில, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துல உருவாக்கப்பட்ட கமிஷனர் பணியிடத்தை நிறுத்தி வச்சுட்டு, மறுபடியும் இயக்குனர் பதவியை கொண்டு வந்துட்டாங்களே... ரெண்டு வருஷமா நடந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிர்வாகத்தால, அனுபவம் வாய்ந்த இயக்குனர்கள் இருந்த இடமே தெரியாம போயிட்டாங்க...

''குறிப்பா, மாணவர்கள் விபரங்கள் அடங்கிய, 'எமிஸ்' இணையதளத்தை யார், யாரோ பயன்படுத்த அனுமதிச்சது, ஆசிரியர் கவுன்சிலிங் தேதியை முடிவு செய்ய முடியாம திணறியதுன்னு நிறைய குளறுபடிகள் நடந்துச்சுங்க...

''சமீபத்துல, பள்ளிக்கல்வி இயக்குனரா நியமிக்கப்பட்ட அறிவொளி, தனக்கு மேல கமிஷனர் இருந்தா, நான் அந்தப் பதவிக்கு வரலைன்னு தெளிவாவே சொல்லிட்டாராம்...

''அப்புறம் தான், கமிஷனர் பதவியை ரத்து பண்ணிட்டு, அறிவொளியை நியமிச்சிருக்காங்க... 'இனி, எந்தக் குழப்பமும் இல்லாம நிர்வாகம் நடக்கும்'னு, ஆசிரியர்கள் வட்டாரம் உற்சாகத்துல இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (4)

muthu Rajendran - chennai,இந்தியா
09-ஜூன்-202322:17:32 IST Report Abuse
muthu Rajendran ஏழு ஐ ஏ எஸ் அல்லாத இயக்குனர்களை வழி நடத்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி ஆணையராக இருந்தது நிர்வாக வசதிக்கு தான். அரசியல் செல்வாக்கும் ஒரு அளவில் இருக்க உதவியாக இருக்கும் எனவே ஆணையர் பதவி எடுத்தது நல்ல முடிவு அல்ல
Rate this:
Cancel
09-ஜூன்-202314:45:56 IST Report Abuse
பாரதி இனி என்ன?
Rate this:
Cancel
veeramani - karaikudi,இந்தியா
09-ஜூன்-202309:40:36 IST Report Abuse
veeramani தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி துறையை ஐ ஏ எஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் இயங்குவதுதான் சரியென்பது எனது சொந்த கருத்து. ரெவெனுக்கே, தொழில், எக்ஸ்சாஸ் , மருத்துவம், கல்லூரி நிர்வாகம், நீர் மற்றும் கட்டிட பராமரிப்பு துறைகளை அதிகாரிகள் மேற்ப்பார்வையில் இயங்கும்போது ஏன் பள்ளிக்கல்வி துறை மட்டும் வேறுபாடு. பள்ளி கல்வி ஆசிரியர்கள் மட்டும் ஏன் வேறுபடுத்தி காட்டவேண்டும்.
Rate this:
MANI DELHI - Delhi,இந்தியா
09-ஜூன்-202312:59:13 IST Report Abuse
MANI DELHIஇந்த டகால்டி வேலைகள் அனைத்தும் திமுகவின் அல்லக்கை கல்வி அறிவு ஜீவிகள் (பிரின்ஸ் போன்ற நச்சுகளை உள்ளே கொண்டுவரத்தான். மொத்தத்தில் தமிழக கல்வி தரத்தை குழி தோண்டி புதைக்கத்தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X