'மாசா மாசம் கப்பம் கட்டுங்கோன்னு கறார் காட்டறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''மதுரை மாவட்ட கூட்டுறவுத் துறையில இருக்கற அதிகாரியைத் தான் சொல்றேன் ஓய்... தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஆய்வுக்கு போறது தான் இவரது டூட்டி...
''சங்கத்துக்கு போறவருக்கு டிபன், காபி, சாப்பாடு குடுத்து உபசரிக்கறா ஓய்... அடுத்த சங்கத்துக்கு போனா, அங்கயும் சாப்பிட முடியாதோல்லியோ...
''அதனால, சாப்பாட்டுக்கான பணம், 1,000 ரூபாய், ஆய்வுக்கு வந்ததுக்கு, 500, காருக்கு பெட்ரோல், சிகரெட் செலவுக்குன்னு கணிசமான ஒரு தொகையை கறாரா கறந்துடறார் ஓய்...
''மாசத்துக்கு மூணு சங்கத்துக்காவது ஆய்வுக்கு போகணும்... சங்கத்தின் வரவு - செலவு கணக்கை பொறுத்து, 2000 முதல், 5000 வரை தனக்கு தனியா எடுத்து வச்சிடணும்னு, 'ரூல்ஸ்' போட்டு வசூல் பண்றார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.