100 நாள் வேலை திட்டத்தில் ரூ.49 லட்சம் மோசடி: காங்., பஞ்., பெண் தலைவர் மீது வழக்கு
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.49 லட்சம் மோசடி: காங்., பஞ்., பெண் தலைவர் மீது வழக்கு

100 நாள் வேலை திட்டத்தில் ரூ.49 லட்சம் மோசடி: காங்., பஞ்., பெண் தலைவர் மீது வழக்கு

Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (25) | |
Advertisement
கோவை: அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் 49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காரமடை ஒன்றியம் மருதூர் பஞ்சாயத்து தலைவர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் பூர்ணிமா, வயது 40. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யும்
Rs 49 lakh fraud in 100-day job scheme: Case against Congress, Panj, woman leader  100 நாள் வேலை திட்டத்தில் ரூ.49 லட்சம் மோசடி: காங்., பஞ்., பெண் தலைவர் மீது வழக்கு

கோவை: அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் 49 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காரமடை ஒன்றியம் மருதூர் பஞ்சாயத்து தலைவர் மீது விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் பூர்ணிமா, வயது 40. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பணியாளர்களை தேர்வு செய்யும் பொறுப்பில் இருப்பவர். இந்த வசதியை பயன்படுத்தி பல்வேறு நபர்களுக்கு முறைகேடாக வேலை அட்டை வழங்கியுள்ளார். மொத்தம் வழங்கிய 1878 வேலை அட்டைகளில் 319 அட்டை தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தனியார் நிறுவன ஊழியர்கள்; ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் அட்டை பெற்றுள்ளனர்.


40 ஆண்டுக்கு முன் இறந்தவர் பெயரிலும் அட்டை தரப்பட்டுள்ளது. தகுதியற்றவர்களுக்கு அட்டை வழங்கி அரசு பணம் நூதனமாக கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளாக நடந்த இந்த மோசடி மூலம் அரசுக்கு பணம் 49 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் பற்றி தெரிய வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைவாய்ப்பு பெற்ற பயனாளிகள் அனைவரது பட்டியலையும் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.


இதில் மோசடி நடந்திருப்பதும் அதன் மூலம் ஊராட்சி தலைவர் பூர்ணிமா பலன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆறு பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் பிரிவினர் பூர்ணிமா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (25)

Dhandapani - Madurai,இந்தியா
13-ஜூன்-202307:59:29 IST Report Abuse
Dhandapani சபாஷ் சரியான போட்டி, ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை, ஊழல் செய்ய ஆணுக்குப்பட்டுமா தெரியும் எங்களாலையும் முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
12-ஜூன்-202317:52:59 IST Report Abuse
DVRR ரூ 1000 திருட்டு. திருடனை கைது செய்த போலீசார். நீதிமன்றத்தில் ஆஜர். அவருக்கு 6 மாத சிறை தண்டனை நீதிபதி தீர்ப்பு. ரூ 1000 கோடி ஊழல். ஊழல் செய்தவரை தேடிக்கொண்டே இருக்கின்றது போலீஸ் - இது தான் திருட்டு திராவிட மடியல் அரசு
Rate this:
Cancel
venkatakrishna - Trichy,இந்தியா
09-ஜூன்-202316:49:08 IST Report Abuse
venkatakrishna இதற்கு விளக்கம் திரு. பா.சிதம்பரம் அவர்களிடம் கேட்க வேண்டும். ஏன்ஏனில் அவர் நிதி அமைச்சராக இருந்தபோதே இந்த செயல்பாடுகள் நடந்துள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X