10ம் வகுப்பு தேர்வில், 35 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவரை, அவரது
பெற்றோர்கள் கொண்டாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை அடுத்த தானேவை சேர்ந்த மாணவர், சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மொத்தம் 44.7 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெறுவேன் என எதிர்ப்பார்க்கவில்லை என மாணவர் கூறியுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது பெருமையளிப்பதாக அவரது பெற்றோர்கள், மொபைல் போனில் 35 என்ற எண்ணை காட்டி, மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர்.
இதனை ஐ..ஏ.எஸ் அதிகாரி அவனீஷ் சரண் தனது டிவிட்டர் பக்கத்தில் 'மும்பையைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.ஆனால் சோகமாகவோ கோபமாகவோ இல்லாமல் அவனது வெற்றியை பெற்றோர் கொண்டாடினார்கள்.' என பகிர்ந்திருந்தார். சுமார் 3.26 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளுடன் வீடியோ வைரலானது.
![]()
|
பொதுவாக தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தோரை தூக்கி கொண்டாடும் பெற்றோர்கள் மத்தியில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்த மாணவரை நேர்மறையான மனநிலையுடன் கொண்டாடும் பெற்றோரை ஏராளமானோர் வாழ்த்தினர்.
மற்றொரு நெட்டிசனோ,'இது பற்றி சமூகவலைதளத்தில் பேசுவது நன்றாக இருக்கும்.
ஆனால் உண்மை என்னவென்று உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும்.
மதிப்பெண் மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானிக்காது. என்கிறவர்கள். முதலில்
பார்ப்பது மதிப்பெண்ணை தான். அந்த பையனுக்கு இப்போதைக்கு இது தெரிய
வாய்ப்பில்லை. 6 - 7 ஆண்டுகளுக்கு பிறகு இது சரியா, தவறா என தெரியும்'
என பதிவிட்டிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement