மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் திருமணம் பெங்களூருவில் எளிய முறையில் பாரம்பரியத்துடன் நடந்தது சமூக வலைதளத்தில் இன்று பாராட்டைப் பெற்றுள்ளது.
உலகின் சக்திவாய்ந்த பெண்மணிகளில் ஒருவர் என போர்ப்ஸ் இதழலால் பட்டியலிடப்பட்டவர் நிர்மலா சீதாராமன். மேலும் நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் போன்ற பல பெருமைகளை பெற்றவர். நாட்டிற்கே பட்ஜெட் போட்டாலும், தனது மகளின் திருமணத்தை பட்ஜெட்டில் மிக எளிமையாக எவ்வித ஆடம்பரமும் இன்றி பாரம்பரியம் மாறாமல் நடத்தினார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நிர்மலா சீதாராமன் மகள் வாங்மயிக்கும், பிரதமர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக உள்ள குஜராத்தைச் சேர்ந்த பிரதிக் தோஷிக்கும் நேற்று முன் தினம் பெங்களூருவில் திருமணம் நடந்தது. பிரதிக் தோஷி பிரதமர் அலுவலகத்தில் 2014 முதல் பணியாற்றி வருகிறார். ஜூன் 2019ல் அவருக்கு இணை செயலாளர் ரேங்க் வழங்கப்பட்டது.
நிர்மலா சீதாராமன் மகள் என்ன செய்கிறார்?
![]()
|
![]()
|
இவர்களது திருமணம் பெங்களூருவில் தனியார் விடுதியில் நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் முன்னிலையில் பிராமண முறைப்படி எளிமையாக நடைபெற்றது. இந்த பெரிய நாளில் வாங்மயி பிங்க் நிற புடவையும், பச்சை பிளவுஸும் அணிந்திருந்தார். பிரதீக் பாரம்பரிய முறைப்படி பஞ்சகச்சம் கட்டி, வெள்ளை சால்வை போர்த்தியிருந்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீல பட்டுப்புடவையும், ஆரஞ்சு வண்ண பிளவுசும் அணிந்து வழக்கம் போல் எளிமையாக காணப்பட்டார்.
இந்த திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்று டாக் ஆப் த டவுன் ஆகியிருக்கிறது. எந்த வித அலட்டல், ஆர்ப்பாட்டமின்றி பாரம்பரியத்தை மறக்காமல் நடந்த திருமணத்தை கட்சி பாகுபாடின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.