புதுடில்லி: டில்லியில் வைஷாலி காலனியில் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 9 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 20 பச்சிளங்குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து தீயை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement