வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 'மற்ற கட்சிகளை விட பா.ஜ., வித்தியாசமானது என்றும், மற்ற கட்சிகள் ஆட்சிக்கு பின் தங்களது சித்தாந்தங்களில் இருந்து விலகி இருப்பதாகவும், பா.ஜ., மட்டும் தங்களது சித்தாந்தத்தில் உறுதியாக நிற்பதாகவும்' பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியுள்ளார்.
டில்லியில் பா.ஜ., கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் நட்டா பேசியதாவது: பிரதமர் மோடி, அரசை மட்டுமல்ல, அரசியல் கலாசாரத்தையும் மாற்றியுள்ளார். எளிய பின்னணியில் இருப்பவர்களும் பிரதமராகவும், கட்சித் தலைவராகவும், மாநிலத் தலைவராகவும், முதல்வராகவும் ஆக முடியும் என்ற கலாசாரத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.

மற்ற கட்சிகளை விட பா.ஜ., வித்தியாசமானது. மற்ற எல்லா கட்சிகளையும் பாருங்கள்; அவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் சித்தாந்தங்களில் இருந்து விலகி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசுடன் கைகோர்த்து பா.ஜ.,வை எதிர்க்கிறது. ஆனால் எங்கள் கட்சி சித்தாந்தத்தில் வலுவாக நிற்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.