மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு மிரட்டல் வந்துள்ளதாக அவரது மகள் சுப்ரியே சுலே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பவார் தொடர்பாக வாட்ஸ் அப் செயலியில் எனக்கு தகவல் வந்தது. இணையதளம் மூலம் அவருக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், நீதி கேட்டு போலீசில் புகார் அளித்துள்ளோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுக்கிறோம். மிரட்டல் விடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும், கீழ்த்தரமான அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.
சஞ்சய் ராவத்திற்கும் மிரட்டல்
இதேபோல், உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத்திற்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே ஆதரவாளரான எம்.எல்.ஏ., சுனில் ராவத் கூறுகையில், எனக்கும், சஞ்சய் ராவத்திற்ம் கொலை மிரட்டல் வந்ததாகவும், இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.