ஆஸ்துமாவை குணப்படுத்தும் மீன் பிரசாதம்: மீண்டும் துவங்கியது
ஆஸ்துமாவை குணப்படுத்தும் மீன் பிரசாதம்: மீண்டும் துவங்கியது

ஆஸ்துமாவை குணப்படுத்தும் மீன் பிரசாதம்: மீண்டும் துவங்கியது

Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (7) | |
Advertisement
ஐதராபாத்: ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக நம்பிக்கொண்ட மீன் பிரசாதம் தெலுங்கானாவில் மீண்டும் துவங்கியது. கோவிட் பாதிப்பால் வழங்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வு 3 ஆண்டுகளுக்கு பின்னர் துவங்கி உள்ளது.தெலுங்கானாவில் அமைச்சர் தலஷானி சீனிவாசன் துவக்கி வைத்தார். 177 ஆண்டுகளாக பதானி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். தற்போதயை நிகழ்வுக்கு சுமார் 5 லட்சம் பேர்
Fish prasadam distribution    ஆஸ்துமாவை குணப்படுத்தும் மீன் பிரசாதம்: மீண்டும் துவங்கியது

ஐதராபாத்: ஆஸ்துமாவை குணப்படுத்துவதாக நம்பிக்கொண்ட மீன் பிரசாதம் தெலுங்கானாவில் மீண்டும் துவங்கியது. கோவிட் பாதிப்பால் வழங்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வு 3 ஆண்டுகளுக்கு பின்னர் துவங்கி உள்ளது.

தெலுங்கானாவில் அமைச்சர் தலஷானி சீனிவாசன் துவக்கி வைத்தார். 177 ஆண்டுகளாக பதானி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். தற்போதயை நிகழ்வுக்கு சுமார் 5 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கின்றனர்.


இது தவறானது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இது பிரசாதம் என மாற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (7)

sukumar R -  ( Posted via: Dinamalar Android App )
09-ஜூன்-202323:25:09 IST Report Abuse
sukumar R இந்த மருந்தினை நான் 1977 ம் வருடம் எடுத்தது நினைவில் இருக்கிறது. ஹைதராபாத்தில் தூத்பெளளி என்ற இடத்தில் கொடுப்பார்கள். இலவசம். திருவிழா போன்ற கூட்டம். மிக நீண்ட வரிசை. அநேகமாக ஜூன் மாதம் 7 ம தேதி கொடுப்பார்கள். மிருகு அமர வேண்டும் என்பர். ஒருவேளை மிருக்சீரிடம் நட்சத்திரத்தை தான் சொல்வார்களோ தெரியாது. சின்ன மஞ்சட்டியில் ஒரு அங்குல உயிருள்ள மீனை (அங்கேயே விற்பார்கள்) எடுத்துக்கொண்டு வரிசையில் செல்ல வேண்டும். ஒரு இடத்தில் சட்டியை வாங்கி, நீரை கொட்டிவிட்டு மீனின் வாயில் மஞ்சள் நிற மருந்தை வைத்து அதை உயிருடன் தொண்டை குழிக்குள் விட்டி விடுவார்கள். பிறகு அடுத்த சில குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் சாப்பிட இரண்டு மருந்து உருண்டை கொடுத்து அனுப்புவார்கள். அந்த மருந்தில் மஞ்சள், பெருங்காயம் போன்ற பொருட்கள் இருக்கலாம். அப்போது நான் அதிபயங்கர ஆஸ்த்மா நோயாளியாக இருந்தேன். குணமானதா என்று கேட்பீர்கள் என்றால், சுமார் ஒரு பத்து நாட்களுக்கு ஆஸ்த்மா தொந்தரவு சிறிதும் இல்லை. அதன் பிறகு பழைய கதை தான். அப்போதெல்லாம் ஆஸ்த்மா தீவிரமாகிவிட்டால் deryphilline injection தான் போட வேண்டும். அப்போது அந்த ஊசி போடும் மருத்துவர்கள் கிண்டலாக கேட்பது உண்டு. அப்படியெல்லாம் இதனால் ஆஸ்த்மா குணமாகிவிடும் என்றால், ஹைதராபாத்தில் deryphilline மாத்திரையின் விற்பனை அளவு மற்ற இடங்களை விட குறைவாகத்தான் இருக்க வேண்டுமே. அப்படியில்லையே என்பார்கள். அதன் பிறகு முதன் முறையாக ஆமதாபாத் ல ஒரு டாக்டர் inhaler ஐ அறிமுகப்படுத்தினார். அதன் பிறகுதான் எப்போது ஆஸ்த்மா வருமோ என்ற பயம் இன்றி நடக்க செயல்பட முடிந்தது. அப்போது எனக்கு 26/26 வயது. இன்றும் எனது ஆச்சர்யம் அந்த மீன் மருந்தை தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு எப்படி சிறிதளவும் ஆஸ்த்மா எட்டிப் பார்க்கவில்லை என்பது தான். எனது அனுபவத்தில் ஆஸ்துமாவுக்கு அதிவேக நடைப்பயிற்சி மட்டுமே பலனளிக்கும். அதை செயல் படுத்த உதவியது Inhaler தான். அது இல்லையென்றால் நடமாடவே முடிந்திருக்காது. இப்போது 71 வயதில் தினமும் 10 km நடந்துவிடுகிறேன். inhaler பயன்படுத்தி பல காலம் ஆகிறது. ஆனாலும் எப்போதும் inhaler கைவசம் வைத்துக் கொள்கிறேன். ஆஸ்த்மா ஒரு நோய் அல்ல. Disorder மட்டுமே. குழந்தைகளுக்கு பய உணர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றாக ஓடச்சொல்லுங்கள்.
Rate this:
Cancel
Premanathan S - Cuddalore,இந்தியா
09-ஜூன்-202320:27:25 IST Report Abuse
Premanathan S எத்தனை பேருக்கு குணமானது? புள்ளி விவரம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. இந்த நாடு திருந்த வாய்ப்பு இல்லை.
Rate this:
Cancel
09-ஜூன்-202319:54:30 IST Report Abuse
naranam மீன் மருத்துவம் என்றுதானே சொல்வார்கள்? பிரசாதம் என்று எங்கே சொன்னார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X