ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தின் பவுரா கோலியரி பகுதியில் இயங்கி வந்த பாரத் கோக்கிங் நிலக்கரி சுரங்கம் இன்று (ஜூன் 9) திடீரென சரிந்தது. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக்குழு விரைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஜோரபோகர் போலீஸ் ஸ்டேசன் சப்-இன்ஸ்பெக்டர் பினோத் கூறுகையில், 'இந்த சுரங்கம் பவுரா பகுதிக்கு உட்பட்டது. சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டும் பணி நடப்பதாக தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். தற்போதைய நிலவரப்படி, இறப்பு எண்ணிக்கை குறித்து எங்களிடம் எந்த உறுதியான தகவலும் இல்லை' என்றார்.