தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர் சிவசங்கர்
தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர் சிவசங்கர்

Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
கோவை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதல்வர்
Bike taxis are not allowed in Tamil Nadu: Minister Sivashankar  தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர் சிவசங்கர்

கோவை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.பிற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. தனியார் துறையினர் சிலர் தங்கள் பஸ்களில் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுபற்றிய தகவல் வந்தவுடன், அதிகாரிகளை வைத்து உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பைக் டாக்சி


பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (4)

C.SRIRAM - CHENNAI,இந்தியா
10-ஜூன்-202308:16:49 IST Report Abuse
C.SRIRAM பேரம் படியவில்லையா ?
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
09-ஜூன்-202322:55:23 IST Report Abuse
g.s,rajan In Tamil Nadu Autos and Call Taxis are Demanding Exorbitant charges from the People it should be Controlled Soon.
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
09-ஜூன்-202320:33:31 IST Report Abuse
ranjani சொல்வதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்பது இதுதானா இல்லை ஆட்டோ அஷோஷியேஷன் கவனிப்பு ஜாஸ்தியோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X