அரசின் பொறுப்பற்ற செயல்: அண்ணாமலை விமர்சனம்
அரசின் பொறுப்பற்ற செயல்: அண்ணாமலை விமர்சனம்

அரசின் பொறுப்பற்ற செயல்: அண்ணாமலை விமர்சனம்

Updated : ஜூன் 09, 2023 | Added : ஜூன் 09, 2023 | கருத்துகள் (28) | |
Advertisement
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இது தமிழக அரசின் பொறுப்பற்ற செயல் எனவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி மாணவர்களுக்கான தேசிய
Government Irresponsibility: Annamalai Review  அரசின் பொறுப்பற்ற செயல்: அண்ணாமலை விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இது தமிழக அரசின் பொறுப்பற்ற செயல் எனவும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழகம் சார்பாக அணி தேர்வு செய்யப்படாததால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பினை இழந்துள்ளார்கள். புதுச்சேரி சார்பாக தேசிய அளவில் மாணவர்கள் பங்கேற்கும்போது, தமிழகப் பள்ளி மாணவர்கள் அணியைத் தேர்வு செய்யாத பள்ளிக் கல்வித்துறையின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.



பிரதமர் தொடர்ந்து விளையாட்டுத் துறைக்கு ஆதரவாக இருப்பதால், சர்வதேச விளையாட்டு போட்டிகளில், முன்னெப்போதையும் விட அதிகமான பதக்கங்களை இந்தியா பெற்று வருகிறது. விளையாட்டுத் துறையில் நம் நாட்டை முன்னேற்ற, தேசிய விளையாட்டுப் பல்கலைக் கழகம், கேலோ இந்தியா திட்டம், விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரமான பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார். இந்த ஆண்டு, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.



பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, விளையாட்டுத் துறைக்கென அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. 2023-2024 ஆண்டுக்கு, ரூ.3397 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014-15 ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த நிலையில், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அலட்சியத்தால், தமிழகப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக அரசின் பொறுப்பற்ற இந்தச் செயலை, தமிழக பா.ஜ., சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (28)

10-ஜூன்-202315:19:07 IST Report Abuse
ஆரூர் ரங் தேசிய விளையாட்டு போட்டிக்குப் போகாட்டி என்ன குறைந்துவிட்டது?
Rate this:
Cancel
Tamil Inban - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202306:00:59 IST Report Abuse
Tamil Inban பிஜேபியினாலேயே இவர் ஒருநாள் சிறைக்கு போவார். குறித்து வைத்துக்கொள்ளுங்கள .
Rate this:
Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா
10-ஜூன்-202318:58:58 IST Report Abuse
Sathyasekaren Sathyanarayananaஅட பொய் பெயர் அறிவாளியே, பள்ளி மாணவர்கள் விளயாட்டு போட்டிக்கு ஏன் அனுப்பவில்லை என்று கேள்வி கேட்பவரை, சிறைக்கு போக சொல்கிறாயே, உனது கொத்தடிமை புத்திக்கு அளவே கிடையாதா?...
Rate this:
Cancel
நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா
10-ஜூன்-202305:58:46 IST Report Abuse
நரேந்திர பாரதி இந்த சாராயக் குடிகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X