திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி சுவாமி மலையை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த விஜய்42,என்பவருக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றம் 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் தாண்டிக்குடி சுவாமி மலையை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய். இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்தார். சிறுமி இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அவர்கள் தாண்டிக்குடி போலீசில் புகாரளித்தனர். புகாரின் பேரில் தாண்டிக்குடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஜயை,கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றவாளி விஜய்க்கு,20 ஆண்டு சிறை தண்டனை,ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.