வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., இன்று 6 எப்.ஐ.ஆர், பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் கடந்த மாதம் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தால் 100-க்கும் மேற்பட்டோர் பலியாயினர், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் . 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து மாநிலத்தைவிட்டு வெளியேறினர்.
![]()
|
இதற்கிடையே, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, 101 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று மீண்டும் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.