புதுடில்லி : ''இணையதளங்களை பயன்படுத்தும் நம், 'டிஜிட்டல் குடிமக்கள்' செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ஒழுங்கு விதிமுறைகளை வகுக்கும்,'' என, மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்பது ஆண்டு கால ஆட்சியில், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நம் நாடு அடைந்துள்ள வளர்ச்சியை எடுத்துரைக்கும் கூட்டத்தில், மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாட்டில், 85 கோடி மக்கள் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். 2025ல் இந்த எண்ணிக்கை 120 கோடியை தொடும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இணையதளம் வாயிலாக நடக்கும் குற்றங்களின்எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. ஒருவரை குறித்து அடையாளம் தெரியும் வகையில், அவரது அந்தரங்க தகவல்கள், புகைப்படங்கள், 'வீடியோ'க்களை சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி தவறான நோக்கத்துடன் பகிர்வது அதிகரித்து வருகிறது.
![]()
|
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்காது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பரவலாகி வரும் நிலையில், இவற்றால் மக்கள் நேரடியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, மத்திய அரசு ஒழுங்குமுறைகளை வகுக்கும். சட்டம் - ஒழுங்கு விவகாரம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதை ஒடுக்க, மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்ற வேண்டும்.
'டிஜிட்டல் இந்தியா' மசோதா குறித்து, துறை வல்லுனர்களின் கருத்துக்களை அறியும் பணி இந்த மாதம் துவங்க உள்ளது. தனிமனித தகவல் பாதுகாப்பு மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement