பெருங்களத்துார்,தாம்பரம் மாநகராட்சி, 55வது வார்டு, தங்கராஜ் நகர் இரண்டாவது குறுக்கு தெருவில், தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த குடியிருப்பில் புகுந்த இளம்ஜோடி, அங்கிருந்த மின் மோட்டாரை திருடிச் சென்ற வீடியோ காட்சி, இணையதளத்தில் பரவியது.
இந்த நிலையில், நேற்று காலை, இந்திரா நகர், அப்துல்கலாம் பூங்கா அருகே ஒரு தம்பதி, மூன்று மின் மோட்டார்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
சந்தேகமடைந்த பொதுமக்கள், அவர்களை வழிமறித்து விசாரித்தனர். அந்த ஜோடி முன் பின் முரணாக கூறியதால், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விசாரணையில், மேற்கு முகப்பேருவைச் சேர்ந்த ராஜேஷ், 32, அவரது மனைவி பூஜா, 26, என்பதும், அடுக்குமாடி குடியிருப்பில் மின் மோட்டார் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இருவரையும், போலீசார் கைது செய்தனர்.