திருவல்லிக்கேணி, திருவல்லிக்கேணி, பல்லவன் சாலை, காந்தி நகரைச் சேர்ந்தவர் பவுல்ராஜ், 23. இவர் மீது 'போக்சோ' உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், பாய்ஸ் கிளப் அருகே நின்ற பவுல்ராஜை, நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான லோகேஷ், 26, என்பவர் சரமாரியாக வெட்டி தப்பினார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த திருவல்லிக்கேணி போலீசார் லோகேஷை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், பவுல்ராஜுக்கும் லோகேஷின் மனைவி சத்யாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், பவுல்ராஜ் சத்யாவுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ், பவுல்ராஜை வெட்டி கொலை செய்ய முயன்றது தெரிந்தது.
இதையடுத்து, லோகேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.