17 வயதுக்கு முன் குழந்தை பெறுவது  தவறில்லை: குஜராத் நீதிபதி கருத்து
17 வயதுக்கு முன் குழந்தை பெறுவது தவறில்லை: குஜராத் நீதிபதி கருத்து

17 வயதுக்கு முன் குழந்தை பெறுவது தவறில்லை: குஜராத் நீதிபதி கருத்து

Updated : ஜூன் 10, 2023 | Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (27) | |
Advertisement
ஆமதாபாத்: சிறுமியின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, ''சிறு வயதில் திருமணம் செய்து, 17 வயதுக்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக் கொள்வது ஒருகாலத்தில் சாதாரண விஷயமாக இருந்தது,'' என, கருத்து தெரிவித்தார்.குஜராத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கருவுற்றார். அவரது வயிற்றில்

ஆமதாபாத்: சிறுமியின் கருக்கலைப்புக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, ''சிறு வயதில் திருமணம் செய்து, 17 வயதுக்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக் கொள்வது ஒருகாலத்தில் சாதாரண விஷயமாக இருந்தது,'' என, கருத்து தெரிவித்தார்.



latest tamil news


குஜராத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி கருவுற்றார். அவரது வயிற்றில் ஏழு மாத குழந்தை வளர்கிறது.


கருவுற்று 24 வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், கருவை கலைக்க நீதிமன்ற அனுமதி பெறுவது சட்டப்படி அவசியம்.


எனவே, கருக்கலைப்புக்கு அனுமதி கோரி, சிறுமியின் தந்தை, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனு, நீதிபதி சமீர் தவே முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:


மனுதாரர், அவரது தாயிடமோ, பாட்டியிடமோ கேட்டுப் பார்க்க வேண்டும். அந்த காலத்தில் 14 - 15 வயதில் பெண்களுக்கு திருமணம் ஆகிவிடும். 17 வயதுக்கு முன்னதாகவே தங்கள் முதல் குழந்தையை அவர்கள் பெற்றெடுத்து விடுவர்.


ஆண்களை விட, பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் விரைவாக முதிர்ச்சி அடைகின்றனர். உங்களுக்கு படிக்கும் பழக்கம் உள்ளதா என தெரியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் மனுஸ்மிரிதியை படித்துப் பாருங்கள்.


சிறுமிக்கோ அல்லது வயிற்றில் வளரும் சிசுவுக்கோ உடல் நலக்கோளாறுகள் இருந்தால், கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிப்பது குறித்து இந்த நீதிமன்றம் பரிசீலிக்கும். ஒருவேளை இருவரும் ஆரோக்கியமாக இருந்தால் அனுமதி அளிப்பது சிரமம்.


latest tamil news


இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


இந்த உத்தரவில், பெண்கள் 17 வயதுக்கு முன்னதாகவே குழந்தை பெற்றுக் கொள்வது ஒருகாலத்தில் சாதாரண விஷயமாக இருந்தது என நீதிபதி குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்வது அவசியமா என்பது குறித்து, மருத்துவ நிபுணர்கள் குழு அமைத்து பரிசோதனை மேற்கொள்ள, ராஜ்கோட் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (27)

10-ஜூன்-202315:10:34 IST Report Abuse
ஆரூர் ரங் துவக்கத்திலேயே கருக்கலைப்பு பற்றி சிந்திக்காமல் வயிற்றில் குழந்தை நன்கு வளர்ந்த பின்னர் கோர்ட்டுக்கு வந்து முட்டி மோதி என்ன பயன்? 😐30 சதவீத இஸ்லாமியப் பெண்கள் 16 வயதுக்குள்ளேயே திருமணமாகி குழந்தையும் பெற்றுக் கொள்கின்றனர். அதற்கு சட்டத்திலும் இடம் உண்டு. ஹிந்துப் பெண் என்றால் மட்டும் கர்ப்பப்பை வேறு அளவில் இருக்குமா?
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
10-ஜூன்-202313:16:09 IST Report Abuse
Barakat Ali கற்பழிப்பு செய்தவனை சட்டத்தின் முன்பு நிறுத்த நீதிபதி உத்தரவிடவில்லை .... ஆனால் விரிவான உரை நிகழ்த்தியுள்ளார் ....
Rate this:
10-ஜூன்-202315:04:06 IST Report Abuse
ஆரூர் ரங்இது கற்பழிப்புக் குற்றத்துக்காக தொடுக்கப்பட்ட வழக்கல்ல🤐. அது தனி வழக்கு . இது காலம் கடந்த கருக்கலைப்பை பற்றி மட்டுமே எழுந்த வழக்கு....
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
10-ஜூன்-202311:29:04 IST Report Abuse
R. Vidya Sagar இந்த கொலீஜியும் நீதிபதி அந்த காலத்தில் பிறந்தவரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X