'ஜல் ஜீவன்' திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்!
'ஜல் ஜீவன்' திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்!

'ஜல் ஜீவன்' திட்டத்துக்கு உலக சுகாதார நிறுவனம் புகழாரம்!

Updated : ஜூன் 10, 2023 | Added : ஜூன் 10, 2023 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல் ஜீவன்' திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது. புதுடில்லி,-கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கும், 'ஜல் ஜீவன்' திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டதால், கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உடலளவிலும், மனதளவிலும், பொருளாதார அளவிலும் மேம்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாராட்டி உள்ளது.latest tamil news


புதுடில்லி,-கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழியே சுத்தமான குடிநீர் வசதி அளிக்கும், 'ஹர் கர் ஜல்' என்ற திட்டத்தை, மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சகம் 2019, ஆக., 15ல் நடைமுறைபடுத்தியது.


அவசர நிதி'ஜல் சக்தி மிஷன்' என பெயரிடப்பட்ட இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். வரும் 2024க்குள் இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி, அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

குடிநீர் வினியோகம், கழிப்பறை மற்றும் துாய்மை ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த திட்டத்தை உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் எனப்படும் ஐ.நா., சர்வதேச குழந்தைகள் அவசர நிதியமும் இணைந்து கண்காணித்து வருகின்றன.

இந்த ஹர் கர் ஜல் திட்டம் வாயிலாக நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்கள், 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுள்ளன. இத்திட்டம் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துஉள்ளது. அதன் விபரம்:

அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் என்ற இந்த திட்டத்தின் வாயிலாக, வயிற்றுப்போக்கு நோய்கள் சார்ந்த நான்கு லட்சம் மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. இந்த சாதனையால், 8 லட்சம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகி உள்ளது.

இந்த திட்டம் செயல்பாட்டு வருவதற்கு முன், கிராமப்புறங்களில் குடிநீர் வினியோகம் என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது.

கடந்த 2018ம் ஆண்டு நிலவரப்படி, நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவீதமும், கிராமப்புற மக்கள் தொகையில் 44 சதவீதமும், வீடுகளில் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.

பாதுகாப்பற்ற குடிநீரை அருந்தியது, கடுமையான உடல்நலம் மற்றும் சமூக ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடந்த 2019ல் மட்டும், சுத்த மான குடிநீர், கழிப்பறை மற்றும் துாய்மை வசதி இல்லாத காரணத்தால், 14 லட்சம் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.


முன்னேற்றம்மேலும், குடிநீர் பிடித்து வருவதற்காக தினமும் நீண்ட துாரம் சென்று வரும் பெண்கள் மற்றும் சிறுமியரின் நேரத்தையும், ஆற்றலையும் இத்திட்டம் மிச்சப்படுத்தி உள்ளது.

கடந்த 2018 நிலவரப்படி இந்தியப் பெண்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 45 நிமிடங்களை குடிநீர் பிடிப்பதற்காக செலவிட்டு வந்தனர். ஒட்டு மொத்தமாக நாள் ஒன்றுக்கு நாடு முழுதும் 6.66 கோடி மணி நேரங்கள் செலவாகின.

ஹர் கர் ஜல் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், உயிர் இழப்புகள் தடுக்கப்படுவதுடன், பெண்கள் மற்றும் சிறுமியர் வாழ்வு மேம்பட்டு, வாழ்க்கை எளிதாகி உள்ளது.


latest tamil news


கிராமப்புற மக்களின் வாழ்வில் உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியாக இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்திய திட்டம் வேறொன்று இருப்பதாக தெரியவில்லை.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியீட்டு விழா, புதுடில்லியில் நேற்று நடந்தது.

இதில், சுகாதாரத்துறைக்கான நிடி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவு துறை செயலர் வினி மகாஜன், ஐ.சி.எம்.ஆர்., இயக்குனர் ஜெனரலும், சுகாதார ஆராய்ச்சித்துறை செயலருமான டாக்டர் ராஜிவ் பாஹல், உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் ரோடரிகோ எச்.ஆப்ரின் ஆகியோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

10-ஜூன்-202315:01:11 IST Report Abuse
ஆரூர் ரங் இதற்குப் போட்டியாக சரக்கை குழாய் மூலம் வீடுகளுக்கே கொண்டுதர திட்டம் போடுமா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
10-ஜூன்-202310:39:29 IST Report Abuse
duruvasar இந்த திட்டமே திராவிட மாடலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று ஆதாரங்களுடன் வில்சன் அய்யா உடனடியாக ஒரு நோட்டீஸ் அனுப்பவேண்டும்.
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-ஜூன்-202310:16:01 IST Report Abuse
Sampath Kumar இந்த திட்டத்தின் முன்னோடி யாரு தெரியுமா பேரும் தலைவர் காமராஜர் ஆகும் அவர் காலத்தில் தான் குலை வழியாக கிராமங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என்று இந்த திட்டத்தை அமல் படுத்தினர் அவரின் தயார் தனக்கு வீட்டுக்குள் தண்ணீர் குலை போட்டு கொடு என்று கேட்டதிற்கு மறுத்து விட்டார் பேரும் தலைவர் அப்டி பட்ட மா மேதை கொண்டுவந்த திட்டத்தை இந்த டி பார்ட்டி ஆளு கொண்டுவந்தன சொல்லி அத்தனையும் உலக சுகாதார மாயம்
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-ஜூன்-202311:25:52 IST Report Abuse
Kasimani Baskaranதிராவிட உபிஸின் உருட்டு மகா கேவலமாக இருக்கிறது. காமராஜர் 'குலாய்' போட்டார் என்றால் அரசு இந்தத்திட்டம் தமிழகத்துக்கு வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே? காமராஜர் தண்ணீர் வசதி அனைத்து பஞ்சாயத்துக்களிலும் கிடைக்கும் வகையில் ஆள்குளாய் கிணறுகளை உருவாக்கினார். நேரடி தண்ணீர் வசதி வேண்டுவோர் கட்டணம் செலுத்தி நேரடியாக வீட்டுக்கு தண்ணீர் கொண்டு வந்து விடலாம். திராவிடர்கள் அனைத்து இடங்களிலும் 'தண்ணி' என்று சொல்லப்படுகிற சாராயத்தை தேசியமயமாக்கினார்கள்...
Rate this:
10-ஜூன்-202314:59:04 IST Report Abuse
ஆரூர் ரங்000...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X