வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர்:
தற்போது, எங்களுக்கு ஆதரவான கூட்டணி அரசு, மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருப்பதால், மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி கட்சி ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது தான், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனால் தான் தற்போது வார்டு வாரியாக மனு வாங்குகிறோம்; அது தவறா?
![]()
|
டவுட் தனபாலு
: உங்க வாதப்படியே பார்த்தாலும், கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷமாகிடுச்சே... அப்ப எல்லாம் எங்க போயிருந்தீங்க... இப்ப அடிச்சு, புடிச்சு மனுக்கள் வாங்குவது எல்லாம், அடுத்த வருஷம் வர்ற லோக்சபா தேர்தலை மனசுல வச்சு தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி:
அரசு துவக்க பள்ளிகளில், காலை உணவு திட்டத்தை செயல்படுத்த தேவையான தட்டு, டம்ளர் வாங்க நிதி ஒதுக்கப்படாததால், ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் நன்கொடையாளர்களை, தலைமை ஆசிரியர்கள் நாடி வருகின்றனர்.
டவுட் தனபாலு
: என்னங்க இது அநியாயமா இருக்குது... காலை உணவுக்கு நிதி ஒதுக்கிய அரசுக்கு, தட்டு, டம்ளர் வாங்க பணம் இல்லையா... யானை வாங்குறவங்களுக்கு, அங்குசம் வாங்க காசு இல்லாம போனது எப்படி என்ற, 'டவுட்'தான் வருது!
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த, பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்:
எதிர்க்கட்சியினர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை பார்த்து, பா.ஜ.,வினருக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான், எதிர்க்கட்சியினர் ஒற்றுமை குறித்து அவர்கள் விமர்சிக்கின்றனர்.
![]()
|
டவுட் தனபாலு:
உங்க கூட்டணி 'பார்ட்னர்' நிதிஷ்குமார் வர்ற, 23ம் தேதி பாட்னாவில் கூட்டுற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தைப் பார்த்து, பா.ஜ., பயப்படுற மாதிரி தெரியலை... இந்தக் கூட்டணியை, லோக்சபா தேர்தல் வரை கட்டிக்காப்பாற்ற முடியுமா என, நீங்களும், நிதிஷ்குமாரும் தான் பயப்படணும் என்பதில், 'டவுட்'டே இல்லை!