சென்னை,: தேனிலவு கொண்டாட இந்தோனேஷியா சென்ற புதுமண டாக்டர் தம்பதி, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சென்னை பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் விபூஷ்ணியா, 25; டாக்டர்.
இவருக்கும், டாக்டரான லோகேஸ்வரன், 25, என்பவருக்கும் ஜூன் 1ல் பூந்தமல்லியில் திருமணம் நடந்தது. திருமண முடிந்த பின், டாக்டர் தம்பதி இருவரும் தேன்நிலவு கொண்டாட, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனே�யாவுக்கு சென்றனர்.
அங்கு, பாலி தீவில் மோட்டார் படகில் 'போட்டோ ஷூட்' நடத்திய போது, இருவரும் தவறி விழுந்து நீரில் மூழ்கினர். லோகேஸ்வரன் உடலை மட்டும் மீட்டு விட்டதாகவும், விபூஷ்ணியா உடலை தேடி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.