வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''மண் ஆசையில, என்னென்ன டுபாக்கூர் வேலை செய்றாங்க பாருங்கப்பா...'' என்றபடியே, 'லெமன்' டீயுடன் வந்தமர்ந்தார் அன்வர்பாய்.
![]()
|
''என்ன விவகாரங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், எட்டு வருஷத்துக்கு முன்ன இறந்து போன முதியவர் ஒருத்தருக்கு சொந்தமா நிலங்கள் இருந்துச்சு... இது, உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் கண்களை உறுத்துச்சு பா...
''ஓய்வு பெற்ற மருத்துவ அதிகாரி ஒருத்தரை பிடிச்சு, அந்த பெரியவர் இப்ப உயிரோட இருக்கிறதா சான்றிதழ் வாங்கி, அவருக்கு சொந்தமான, 2.5 ஏக்கர் நிலத்தை, கிரயம் பண்ணி ஆக்கிரமிச்சிட்டாங்க பா...
''முதியவரின் குடும்பத்தினர் புகார் அளிச்சதும், தி.மு.க., நிர்வாகி, மருத்துவ அதிகாரி மேல போலீசார் வழக்குப் பதிவு செஞ்சிட்டாங்க... அந்த கிரயமும் ரத்தாகிடுச்சு... ஆனாலும், நிலத்தை விட்டு வெளியேற, பெரிய தொகை கேட்டு, ஆளுங்கட்சி நிர்வாகிகள் நச்சரிக்கிறாங்க பா...
''இந்த விவகாரத்துல, மூத்த அமைச்சர் ஒருத்தரின் தலையீடும் இருக்குதாம்... அதனால, போலீசார் போட்ட வழக்கு, கிணத்துல போட்ட கல்லாட்டம் கிடக்குது... பாதிக்கப்பட்டவங்க இப்ப கோர்ட் படி ஏறியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''செந்தில்குமார் சார், எப்ப வந்தீய... உங்க பிரெண்ட்ஸ் பாலு, திருமலைசாமியை பார்த்தே ரொம்ப நாளாச்சே...'' என, நண்பரிடம் விசாரித்த அண்ணாச்சி, அடுத்த தகவலை பேச ஆரம்பித்தார்...
''திருச்சி லால்குடி ஏரியாவுல, போலீஸ் அதிகாரியோட கூட்டு சேர்ந்து, ராஜான்னு ஒருத்தர் பல வருஷமா போலி மதுபானம் விற்கிறதா சமீபத்துல பேசினோமே, ஞாபகம் இருக்கா வே...
''அந்த ராஜா, இப்ப திருச்சி மத்திய சிறையில இருக்காரு... அவருக்கு, சப்போர்ட்டா இருந்தவங்க யார்னு விசாரிக்கப் போறாவளாம்... அதுக்காக, ராஜாவோட மொபைல் போன் அழைப்புகளை, போலீஸ் குடைய துவங்கிட்டு... அவருக்கு ஆதரவா இருந்த இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., பீதியில இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''நம்ம பிரபுவும், சங்கரும் வந்திருக்கா பாருங்கோ... அவாளுக்கும் டீ குடும் நாயரே...'' என, குரல் கொடுத்த குப்பண்ணா, ''இடமாறுதல்ல, பல கோடி ரூபாய் தேத்திட்டார் ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தபடியே தொடர்ந்தார்...
![]()
|
''வனத் துறையில, 'பாரஸ்ட் ரேஞ்ச் ஆபீசர்'கள், 300 பேருக்கு சமீபத்துல, 'டிரான்ஸ்பர்' போட்டா... இதுல, 120க்கும் அதிகமான அதிகாரிகள், துறை வி.ஐ.பி.,யை முறையா, 'கவனிச்சு' தேவையான இடத்துக்கு, 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டா ஓய்...
''குடும்பம், குழந்தைகளின் படிப்பு, உடல்நிலை, வருமானம்னு இடத்துக்கும், காரணத்துக்கும் தகுந்த மாதிரி, குறைஞ்சது, 12ல இருந்து, 20 லட்சம் ரூபாய் வரை கைமாறியிருக்கு... அந்த வகையில, துறை பெரும்புள்ளி, 18ல இருந்து, 20 கோடி ரூபாய் வரை வாரிட்டதா கேள்வி...
''இதுல என்ன வேடிக்கைன்னா, இந்த இடமாறுதல் விவகாரத்துல, துறை புள்ளிக்கும், அதை கவனிக்கிற பெரிய பெண் அதிகாரிக்கும் வாக்குவாதம் முத்திடுத்து ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement