சென்னை: சென்னை, முகப்பேரில் ஏ.ஆர்.டி., ஜூவல்லர்ஸ், ஏ.ஆர்.டி., டிரஸ்டட் பிராபிட் கம்பெனி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. அதேபகுதியை சேர்ந்த ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் நடத்தி வந்தனர்.
இவர்கள், பொது மக்களுக்கு அதிக வட்டி தருவதாக 427 பேரிடம் 6.30 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர். இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆல்வின் ஞானதுரை மற்றும் ராபின் ஆரோன் நடத்தி வந்த நிறுவனங்கள் மீது சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் 50க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இதனால், இருவரும் தலைமறைவாகினர். இருவர் தொடர்புடைய இடங்களிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஆல்வின் மற்றும் ராபினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இருவரையும், அவர்கள் தொடர்புடைய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதுடன், மக்களிடம் மோசடி செய்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளனர்? வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.