புதுடில்லி: ராஜஸ்தான் மாநில இளம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தனிக்கட்சி துவங்க உள்ளதாக வெளியான தகவலை காங்கிரஸ் மறுத்து உள்ளது.
அக்கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், சச்சின் பைலட் தனிக்கட்சி துவங்க உள்ளதாக கூறப்படுவது கற்பனையான வதந்தி. அந்த வதந்தியை நம்ப வேண்டாம். கெலாட், பைலட், ராகுல், கார்கே ஆகியோர் கலந்துரையாடினர். அதன் பின்னர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. இது தான் காங்கிரசின் நிலை என்றார்.